ஆப்கனில் வான்வழித் தாக்குதலில் இலக்கு மாறியதில் 17 பொலிஸார் பலியாகியுள்ளனர்.

ஆப்கனில் அரசு தரப்பிற்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவருகிறது.

 இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தென்பகுதி ஹெல்மண்ட் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பொலிஸார் பலியாகியுள்ளதோடு,14 பேர் காயடைந்துள்ளனர்.

  தலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் அமெரிக்க படைகள் இலக்கு தவறியதால் பொலிஸாரின் முகாம் மீது தாக்கியிருக்கலாம் என ஆப்கன் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.