சட்ட விரோதமான முறையில் மது விற்பனை செய்த இருவரை நேற்று மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 19 மதுபான போத்தல்களை கைப்பற்றியதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், மஸ்கெலியா கிராப்பு தோட்டத்தில் இருந்து ஒருவரை கைது செய்துள்ளதுடன் அச்சந்தேகநபரிடம் இருந்து 5  மதுபான போத்தல்களும் 20 சிறிய போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் மற்றுமொரு சந்தேகநபரை சாமிமலை கவரவில பகுதியல் கைது செய்யப்பட்டு அச்சந்தேகநபரிடம் இருந்து 14 மதுபான போத்தல்களை கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ததாகவும் எதிர்வரும் 22ஆம் திகதியன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க பணித்துள்ளதாவும் தெரிவித்தார்.

இச்சுற்றிவளைப்புக்கு உதவி அதிகாரியாக ஆனந்த பிரேமசிறி மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.