ரிசாத் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் சிந்திப்போம் - சிறிதரன்

Published By: Daya

18 May, 2019 | 03:24 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதென்றால் முதலிலே அவர் மீதான குற்றங்கள் சொல்லப்படல் வேண்டும். ஆதாரத்தோடு அந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உண்மை  கண்டறியப்படல் வேண்டும். அந்த வகையில் குற்றங்கள் நீரூபிக்கப்பட்டு, ரிசாத் பதியுதீன் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, பிரேரேணைகள் கொண்டுவரப்படுகின்றபோது அதற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது பற்றி நாங்கள் சிந்திக்கலாம். இவ்வாறு தெரிவித்தார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்திலே கொண்டு வரப்பட்டால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா ? இல்லை? என்ற கேள்விகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன.

1920 களிலே இலங்கையில் நடைபெற்ற சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையிலான கலவரத்தின்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் சிங்கள மக்களுக்கு சார்பாகவும் அப்பொழுது இருந்த சேர் பொன். இராமநாதன் போன்றவர்கள் பிரித்தானியாவிற்குச் சென்று சிங்கள மக்களுக்கு சார்பாக வாதாடி, அங்கு சிறைவைக்கப்பட்டவர்களை மீட்டு  வந்திருந்ததன்  அடிப்படைமயில்,  சிங்களத் தலைவர்கள் அவரை தேரிலே ஏற்றி இழுத்த வரலாறு உண்டு. ஆரம்பமே அந்தக் காலகட்டங்களில் ஈழத்தமிழர்களுக்கும் இஸ்லாமிய தமிழர்களுக்கும் இடையில் சின்ன விரிசலை ஏற்படுத்தியிருந்தது. 

அதே காலகட்டம் தொடர்ந்து வருகின்ற போது போரியல் வரலாற்றிலே விடுதலைப்புலிகளால் இஸ்லாமிய தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அடிப்படையில் அவர்கள் கொஞ்சக் காலம் விலகியிருக்க வேண்டிய தேவைக்காக முன்மொழியப்பட்டபோதும், அதனை இப்பொழுது ஒரு தவறான வழியிலே பார்க்கப்படுகின்ற ஒரு சூழல் காணப்படுகின்றது.

ஆகவே இந்தக் காலங்களை எல்லாம் கடந்து வந்து,  1983 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவர்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற இராஜதுரை அவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய அமைச்சராக இருந்த தேவநாயகம் அவர்களும் அமிர்தலிங்கத்திற்கு எதிராக வாக்களித்தார்கள். முஸ்லிம் தலைவர்கள் சிலர் மெளனம் காத்தார்கள். ஆனால் சிலர் எதிராகவும் வாக்களித்தார்கள். 

இந்த நிலையிலேயே ரிசாத் பதியூதீன் மீது ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒருவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதென்றால் முதலிலே அவர் மீதான குற்றங்கள் சொல்லப்படல் வேண்டும்.

ஆதாரத்தோடு அந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட்டு அவர் குற்றவாளியாக இனங்காணப் பட்டால், பிரேரேணைகள் கொண்டுவரப்படுகின்றபோது அதற்கு ஆதரவுவழங்குவதா இல்லையா என்பது பற்றி நாங்கள் சிந்திக்கலாம். வெறுமனே இப்பொழுது இருக்கின்ற இந்தக் காலகட்டத்திலே பாதிக்கப்பட்ட இனம் அழிக்கப்பட்ட இனமாகிய நாங்கள், இப்பொழுது பாதிக்கப்படுகின்ற இஸ்லாமிய தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் மீதான இந்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கினால் அதுவும் நாம் வரலாற்றிலே விடுகின்ற தவாறாக மாறிவிடும். 

ஆகவே இது தொடர்பிலே எங்களது கட்சிகூடி நாங்கள் முடிவெடுத்த பிற்பாடு தான் இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்கமுடியும். அடுத்த வாரம் நடைபெறுகின்ற பாராளுமன்ற அமர்விலே இவருக்கு எதிரான பிரேரணைகள் வரக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அப்படி வந்தால் நாம் அதுபற்றி ஆலோசித்து முடிவவெடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17