அமெரிக்க  விமானப்படைக்கு சொந்தமான ‘எப்-16’ ரக போர் விமானம் மோரேனோ பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 எதிர்பாராத விதத்தில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள சேமிப்புக்கிடங்கு நிறுவன கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

விமானி மட்டுமே பயணித்தபோது எதிர்ப்பாராத விதத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் விமானி  சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது, விமானத்தில் இயந்திர பழுது காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.