பிரதான உள்ளூர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த இரண்டு அத்தியாயங்களில் சம்பியனான சிலாபம் மேரியன்ஸ் கழகத்துக்கும் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் இரண்டு குளிரூட்டப்பட்ட பஸ்கள் பரிசாக வழங்கப்பட்டன.

2017 - 18 கிரிக்கெட் பருவ காலத்தில் சிலாபம் மேரியன்ஸ் கழகமும் 2018 - 19 கிரிக்கெட் பருவ காலத்தில் கொழும்பு கிரிக்கெட் கழகமும் சம்பியனாகியிருந்தன. இந்த இரண்டு கழகங்களுக்கும் தலா 92 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.

இரண்டு கழகங்களினதும் அதிகாரிகளிடம் பஸ்களுக்கான சாவிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உதவித் தலைவர் ரவின் விக்ரமரட்ன வைபவரீதியாக கையளித்தார்.

 இந்த வைபவம் எஸ்.எஸ்.சி. வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

. (என்.வீ.ஏ.)