(எம்.ஆர்.எம்.வஸீம்)

வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து சட்டத்தை கடுமையாக நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, அதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட இடங்களை பார்வையிடச்சென்ற ஆளுநர்,  தாக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசலின் புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்காக மேல்மாகாண சபையின் சார்ப்பாக 1.5 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் நேற்று கையளித்த பின்னர் ஊடகங்களை சந்தித்து உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டார். 

அத்துடன் முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். இருந்தபோது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னரே முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாக்குதல் திட்டமிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.