முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

By Daya

17 May, 2019 | 04:19 PM
image

சில முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பான பிரச்சினையை மையமாகக் கொண்டு  கண்டியில் பிரபலமான  மகளிர் பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடப்பட்டனர்.

குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்கள் 16 பேர் பணியாற்றி வருகின்றார்கள். இந்நிலையில் 5 பேர்  சேலை மற்றும் பாடசாலைக்கு பொறுத்தமான ஆடையில் வர மறுப்பு தெரிவித்ததையடுத்தே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக குறித்த ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு வருகை தந்தபோது பாடசாலைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரச்சினை தொடர்பாக மத்திய மாகாணத்தின் அமைச்சர் மைத்தரி குணரத்னவுக்கு தெரிவித்தபோதும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right