ரஜனிகாந்த் நடிக்கும் தர்பார் படிப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றார்கள்.

மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படிப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இந்த படத்தின் கதை மற்றும் கதாப்பாத்திரங்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 

அண்மையில் ரஜனிகாந்தின் தோற்றத்தனை படக்குழுவினர் வெளிப்படுத்தனர். அதில் பொலிஸ் மோப்ப நாய், பொலிஸ் இடுப்புப் பட்டி, தொப்பி, குற்றம் நடக்கும் இடங்களில் கட்டப்படும் மஞ்சள் பட்டி ஆகியவை இருந்தன. 

அதை வைத்து பொலிஸ் அதிகாரியாக ரஜனிகாந்த் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் ரஜனிகாந்த் தர்பார் படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு கதாப்பாத்திரத்தை மும்பையை மிரட்டும் ரவுடிகளை சுட்டுத் தள்ளும் என்கவுண்டர் பொலிஸ் அதிகாரிகயாக சித்தரித்திருப்பதாக கூறப்படுகின்றது.

இன்னொரு வேடம் பாட்ஷா போன்று தாதாவாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. தாதா ரஜனிக்கு நிவேதா தோமஸ் நடிக்கிறார். என்கவுண்டர் பொலிஸ் அதிகாரியான ரஜனிக்கு ஜோடியாக நயன்தார வருகிறார்.

தற்போது என்கவுண்டர் பொலிஸ் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.