உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்பட்ட படம் அவதார். மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான இந்த படம் வசூலில் முந்தைய அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்தது.

இன்றுவரை உலகளவில் அதிக வசூல் குவித்த படங்கள் பட்டியலில் அவதார் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தல் டைட்டானிக் படம் இருந்தது. டைட்டானிக் சாதனையை இப்போது அவஞ்சனர் எண்ட் கேம் படம் முறியடித்து, அவதார் வசூலை நெருங்கி வருகிறது.

அவதார் படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் எடுக்கப்படவுள்ளதாக டுவன்டித் செஞ்சுரி பாக்ஸ் தயாரிப்பு நிறுவனம் 2017 ஆம் ஆண்டு அறிவித்தது.

இந்த படம் 2020 இல் வெளியாகும் என்று கூறப்பட்டது. தொடர்ந்து அவதார் படங்களில் 3,4,5 ஆம் பாகங்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் திரைக்கு வரும் எனத் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது அவதார் 2 ம் பாகம் ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வெளியாகும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோல் அவதார் மூன்றாம் பாகம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மதம் 22 ஆம் திகதியும், அவதார் 4 ஆம் பாகம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியும், ஐந்தாம் பாகம் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.