விறுவிறுப்பான Google I/O extended Sri Lanka 2019 ஊடாக தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு விருந்தளித்த மொபிடெல்

Published By: Digital Desk 4

16 May, 2019 | 09:07 PM
image

மொபிடெல் வலுவூட்டலில் இந்த ஆண்டின் Google I/O extended Sri Lanka 2019 நிகழ்வு ஸ்டெய்ன் ஸ்டியோஸில் 2019 மே மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. கடந்த ஆண்டு வெற்றிகரமாக இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, இம்முறையும் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த ஆண்டின் மொபிடெல் Google I/O Extended Sri Lanka நிகழ்வு, நேரடியான ஒன்லைன் மூலமாக நிகழ்வாக அமைந்திருந்தது. நிகழ்வின் ரசிகர்களை ஏமாற்றாத வகையிலும், அதேவேளையில் பங்கேற்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த கடுமையான தீர்மானத்தை மொபிடெல் மேற்கொண்டிருந்தது. மொபிடெல் இனோவேஷன் சென்ரரின் உத்வேகத்துடனான அணியினர், கடுமையாக உழைத்து மொபிடெல் Google I/O 2019 Extended  நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

Google I/O 2019 Extended  நிகழ்வு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்த்தின் மீது கவனம் செலுத்தி, நேரலை நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு YouTube, Facebook Channels மற்றும்PEO TV இல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தொழில்நுட்ப ரீதியில் பார்வையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் மொபிடெல் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. 

இதில் 5G பசுமையான எதிர்காலத்துக்கு தொழில்நுட்பம் Island Mentality VS Startup Mentality, இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவன கட்டமைப்பைச் சேர்ந்த பிரதான நபர்களுடனான கலந்துரையாடல் அமர்வு போன்றன அடங்கியிருந்தன. கட்டிளம்பராயத்தைச் சேர்ந்தவர்களுக்கான “Sri Lankan Whizz-Kids” எனும் தலைப்பில் குழுநிலை கலந்துரையாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த நிகழ்வில் “Your Gateway to the Digital World” எனும் தலைப்பில் மொபிடெலின் புதிய டிஜிட்டல் சேவை கட்டமைப்பான “mSpace” பற்றிய விளக்கங்களும் அடங்கியிருந்தன. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமும், தேசிய மொபைல் சேவை வழங்குநர் எனும் வகையிலும் மொபிடெல், நாட்டில் நிலவும் அவசரகால சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு நிகழ்வில் களிப்பூட்டும் நிகழ்வுகள் எதனையும் உள்ளடக்கியிருக்கவில்லை. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிபுணர்கள், துறைசார் முன்னோடிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்ப புத்தாக்கவல்லுநர்கள் ஆகியோர் மத்தியில் இந்நிகழ்வு வருடாந்தம் பெருமளவு வெற்றிகரமாக அமைந்துள்ளது.

Google மற்றும் இதர open sources கட்டமைப்புகளான Android, Chrome and Chrome OS, APIs, Google Web Toolkit, App Engine, Google Assistant, AI மற்றும் பல செயலிகளுடன் இணைந்து இணையம் மொபைல் மற்றும் நிறுவனசார் அப்ளிகேஷன்ஸ்கள் பற்றி ஆழமான தொழில்நுட்ப ஆய்வுகளை வெளிப்படுத்தும் வருடாந்த நிகழ்வாக ஐக்கிய அமெரிக்காவின் Google  இனால் முன்னெடுக்கப்படும் Google I/O ஆக அமைந்துள்ளது. பிரதான நிகழ்வுக்கு சமாந்தரமாக, Google I/O Extended நிகழ்வுகளினூடாக உலகளாவிய ரீதியில் காணப்படும் டிவலபர்களுக்கு live streaming ஊடாக I/O experience இல் பங்கேற்று, உள்நாட்டு டிவலபர் சமூகத்துக்கு I/O keynote மற்றும் அமர்வுகளில் உடனுக்குடன் அனுபவத்தையும், உலகுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இந்நிகழ்வு பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள hவவிள https://mic.lk/io19/  எனும் இணையத்தளத்தை பார்க்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57