வாழ்க்கையில் பல விடயங்களுக்கு செல்வம் மிகவும் முக்கியமானதாகும். உங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது, நீங்களும், உங்களது குடும்பமும் விரும்பும் வாழ்க்கை முறையொன்றை நிர்வகிப்பதற்கு அல்லது பணி ஓய்வின் போது நிதியியல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு என எதுவாகவும் அது இருக்கலாம்.

உங்களுடைய செல்வத்தைப் பாதுகாப்பது மேலாண்மை செய்வது மற்றும் அதனை பெருகச் செய்வது என்பன முக்கியமான விடயங்களாகும். அதனாலேயே AIA இன்ஷூரன்ஸ் AIA  ஸ்மாட் வெல்த் இனை அறிமுகப்படுத்தியிருக்கின்றது, 

அதாவது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நிதியியல் ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதற்கும், தங்களது செல்வத்தை மேலும் வளர்ச்சியுறச் செய்வதற்கும் விரும்புகின்ற மக்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதொரு சேமிப்புத் திட்டமே இதுவாகும்.

ஸ்மாட் வெல்த் வெவ்வேறுபட்ட வகையான தேவைகளுக்குப் பொருந்துமாறே வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வருடமும் ஒரு நிலையான மற்றும் உறுதியான இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு பெற்றுத்தரக்கூடிய தொழில் ரீதியான நிதி முகாமையாளர்களைப் பயன்படுத்தி AIA  மேலாண்மை செய்யும் நெகிழ்திறனான சேமிப்புத் திட்டமாகவே இது அமைந்திருக்கின்றது. 

நீண்ட காலக் கட்டுப்பணச் செலுத்தல் அர்ப்பணிப்பை வேண்டுகின்ற பாரம்பரிய ஆயுள் காப்புறுதித் திட்டங்களைப் போலன்றி, ஸ்மாட் வெல்த் திட்டமானது நீண்ட காலத்திற்காக (20 வருடங்கள் வரை) சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வசதியானதாக இருக்கும் வகையில் அமைந்திருப்பதோடு 4-6 வருடங்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டுப்பணக் கொடுப்பனவுகளைச் செலுத்தக் கூடியதாக இருக்கும்.

குறுகிய கட்டுப்பணச் செலுத்தல் காலத்திற்கு மேலதிகமாக கட்டுப்பணச் செலுத்தல் காலம் மற்றும் காப்புறுதித் திட்டக் காலம் ஆகியவற்றைப் பொறுத்து வருடாந்தக் கட்டுப்பணத்தின் 370% வரை காப்புறுதியின் 15வது மற்றும் 20வது வருடங்களில் செலுத்தக்கூடிய விசேடமான விசுவாச வெகுமதியையும் (Loyalty reward) ஸ்மாட் வெல்த் திட்டம் கொண்டிருக்கின்றது. 

இந்த ஊக்குவிப்பு வெகுமதியானது (போனஸ்) உங்களுடைய சேமிப்பை அதிகரிப்பதோடு உங்களுடைய தேவைகளுக்கான உறுதியான முதலீடொன்றையும் கட்டியெழுப்புவதற்கு உங்களை அனுமதிக்கின்றது. இதற்கு மேலதிகமாக எங்களில் அனைவரும் ஒட்டுமொத்த திரட்டிய தொகை ஒன்றாக எங்களுடைய காப்புறுதி நிதியைப் பெற விரும்புவதில்லை ஆகவே இதற்கு ஏற்றவாறு ஸ்மாட் வெல்த் திட்டமானது முதிர்வின் பின்னர் வளர்ச்சியடைந்து செல்லக்கூடிய மாதாந்தக் கொடுப்பனவு வடிவில் உங்களது சேமிப்புகளைப் பெறுவதற்கும் உங்களை அனுமதிக்கின்றது. 

உண்மையில் இது பணி ஓய்வுத் தீர்வொன்றைத் தேடும் அல்லது தங்களது அன்பிற்குரிய ஒருவருக்கு மாதாந்த வருமானம் ஒன்றை பெற்றுத்தருவதற்கு விரும்பும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான திட்டமாகவே இருக்கும். இந்த மாதாந்த வருமானமானது வருடாந்தப் பங்குலாப வீதத்தின் மேலதிகமான 30% இனை செலுத்துகின்ற AIA இனுடைய தனித்துவமான ஓய்வூதிய அதிகரிப்பான் (Pension Booster) அம்சத்தினால் மேலும் அதிகரிக்கப்படுகின்றது.

AIA ஸ்மாட் வெல்த் காப்புறுதித் திட்டத்தினுள்ளேயே காப்பீட்டைக் கட்டியெழுப்புகின்ற ஆயுள் காப்புறுதியாக இருப்பதே நிலையான வைப்புகள் போன்ற ஏனைய சேமிப்புத் திட்டங்களில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகின்ற மற்றுமொரு பிரதான தனிச்சிறப்பம்சமாகும். வாழ்க்கையை எதிர்வுகூறவே இயலாது அதாவது மரபுரிமைச் செல்வமாக விட்டுச் செல்வதற்கு உங்களிடம் போதுமான ஆயுள் காப்புறுதியொன்று உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது. அல்லது நீங்கள் மரணித்த பின்னர் உங்களுடைய குடும்பம் அவர்களாகவே ஆதரவொன்றைப் பெறும் விதத்தை உறுதிப்படுத்துவது போன்றன மிகவும் புத்திசாலித்தனமான யோசனையாகும்!

 உண்மையாகவே உங்களது குடும்பத்தின் சிறந்த பராமரிப்பை நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால் ஸ்மாட் வெல்த் குறிப்பிடத்தக்கதொரு ஆயுள் காப்புறுதிக் காப்பீட்டுத் தரத்துடன் வழங்கப்படுவதுடன் மேலும் அதிகமான சிறப்பம்சங்களை அதனுடன் சேர்ப்பதற்கும் உங்களை அனுமதிக்கின்றது.

10வது காப்புறுதி வருடத்தின் பின்னர் கையளிப்புக் கட்டணங்கள் அற்றவாறான மற்றைய முழுமையான சிறப்பம்சங்கள் உடனேயே இத்திட்டம் தரப்படுகின்றது. ஆகவே உயர் மட்ட திரவநிலைத் தெரிவு மற்றும் அவசர மீளப்பெறுதல் தெரிவு ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்க முடியும்.  உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமும். AIA குழுமத்தின் பகுதி ஒன்றாகவும். ஆரோக்கியம். ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் தீர்வுகளை வழங்கக்கூடிய முதன்மையான ஆயுள் காப்புறுதி வழங்குநருமான AIA ஸ்ரீலங்காவினாலேயே ஸ்மாட் வெல்த் காப்புறுதித் திட்டம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. 

மேலதிக விபரங்களுக்கு 23102310 இனை அழையுங்கள்.