(செ.டேவிஷன்)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமெரிக்க அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்ட்டுள்ள 'சோபா' உடன்படிக்கையின் மூலமாக திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரையிலான பகுதிகள் அமெரிக்காவின் வர்த்தக வலையமாக அமையவுள்ளது. 

இந்த உன்படிக்கையின் மூலமாக பிரதமர் தேசதுரோக செயலை செய்துள்ளார் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்

சமநிலைக்கான தேசிய சக்தி அமைப்பினால் இன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமை காரியலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அமெரிக்க அரச திணைக்களம் வெளியிட்டிருந்த அறிக்கையில் விசா நிவாரண வேலைத்திட்டத்தில் இலங்கை நாட்டையும் இணைத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இலவச வீசா நடைமுறை மூலமாக அமெரிக்காவிற்கு பிரயாணம் செய்ய முடியும் என்பதாகும். 

அமெரிக்கா அரசாங்கம் இந்த இலவச விசா நிவாரணத்தை வழங்கியமைக்கான பிரதான காரணம், இலங்கையில் தற்போது நிலவிவரும் திவிரவாத பதற்ற நிலையி தடுப்பதற்காக அமெரிக்கா இராணுவத்தினரை இலங்கை நாட்டிற்குள் அனுமதித்தமை மற்றும் அவர்களுடைய முகாம்களை இலங்கையில் அமைப்பதற்கான அனுமதியையும் இலங்கை அரசாங்கத்தின் பிரதமர் வழங்கியுள்ள காரணத்தினால் ஆகும்.

இதற்கான அதிகாரத்தினை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கியது யார் என்ற கோள்வி எழுவதுடன், ரணில் விக்ரமசிங்க தேச துரோகி என்று இந்த நடவடிக்கையின் மூலமாகவும் அமெரிக்கா அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சோபா உடண்படிக்கையின் மூலமாகவும் மேலும் ஒருபடி உறுதியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.