இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பேசாலை கடற்பரப்பிலிருந்து இந்தியாவுக்குப் படகின் மூலம் சென்ற போது கைது செய்யப்பட்ட நான்கு நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தலா 25000 ரூபா தண்டமும் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனையும் மன்னார் மாவட்ட நீதவானால் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்கள் இந்தியாவுக்குச் செல்ல உதவி புரிந்ததாக மூன்று இலங்கை பிரஜைகள் தாங்கள் சுற்றவாளி எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 31.03.2019 அன்று இரவு இலங்கை மன்னார் பேசாலை கடற்பரப்பிலிருந்து இந்தியாவுக்குச் சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் தலைமன்னார் பாக்கு நீர் கடற்பரப்பினூடாக சென்ற நான்கு நைஜீரியா பிரஜைகளை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களுடன் பேசாலை உதயபுரத்தைச் சேர்ந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் இலங்கை பிரஜைகளான இருவரும் பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை (16) மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நான்கு நைஜீரியா பிரஜைகளையும் மன்றில் முன்னிலைப்படுத்தினர்.
அத்துடன் இவர்கள் இந்தியாவுக்குச் செல்லுவதற்காக உதவி புரிந்ததாகக் கூறப்பட்ட இரு படகோட்டிகளும் மன்றில் ஆஜராகியபோது படகு வழங்கியதாகக் கூறப்பட்ட நபருடன் ஏழு பேர் இவ்வழக்கில் ஆஜராகி இருந்தனர்.
இவ்வழக்கின்போது நான்கு நைஜீரியா பிரஜைகளும் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா அபராம் விதிக்கப்பட்டதுடன் இவ் பணத்தைச் செலுத்த தவறினால் ஒரு மாதத்துக்குச் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும்
அத்துடன் இவர்களுக்கு ஐந்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் தண்டப்பணத்தைச் செலுத்தியபின் இவர்களை மிரிகானாவுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் இவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்ட இரு படகோட்டிகளும் மற்றும் படகு உரிமையாளரும் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமையால் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM