(நா.தினுஷா)

நாட்டிலுள்ள எந்தவொரு கட்சிக்கும் சிறந்த தலைமைத்துவம் கிடையாது. அரசியல் கட்சிகளில் காணப்படும் இந்த நிலைமை தான் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.  

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் சகலரும் அமைதியாக செயற்படுவது அவசியமாகும். ஆனால் அமைதியை கட்டியெழுப்புவதற்கு பதிலாக நாட்டில் பிரச்சினையை தோற்றுவிக்கும் சம்பவங்களே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

பிரச்சினைகள் இடம்பெற்ற ஒரு சில இடங்களில் பதிவாகிய கமரா ஒளிப்பதிவுகளில் அரசியல்வாதிகளின் முகங்கள் பதிவாகியுள்ளமை தலைக்குணிவை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்வாதிகள் இந்த சம்பவங்களில் செல்வாக்கு செலுத்தியிருப்பர்களானால் அது முழு நாட்டுக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.