மஸ்கெலியா சாமிமலை கவரவில பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகன்ற 8 பேரை நேற்று மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டு பேரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு அமைய சந்தேக நபர்களை தலா இருபதாயிரம் ரூபாய் வீதம் எட்டு சந்தேக நபர்களும் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் ஜெயராம் டொக்ஸ்சி  உத்தரவிட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.