சட்டவிரோதமான முறையில் சாமிமலை பிரதேசத்தில் 19 மதுபான போத்தல்களுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா-சாமிமலை நகரில் இருந்து சட்ட விரோதமான முறையில் நேற்று மாலை 6:40 மணியளவில் 19 மதுபான போத்தல்களை கொண்டு சென்றமைக்காக சந்தேக நபர் ஒருவரையும் அச்சந்தேகநபர் பயணித்த முச்சக்கர வண்டியும்  மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அச்சந்தேகநபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.