இலங்­கையில் பாது­காப்பு படை­யி­னரின் கண் முன்னால் முஸ்லிம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான வீடு­களும் வர்த்­தக நிலை­யங்­களும் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன. முகநூல் பதிவு கார­ண­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மூண்ட கல­வரம் கார­ண­மாக உயி­ரி­ழப்­பு­களும் காயங்­களும் சொத்­துக்­க­ளுக்கு பாரிய சேதங்­களும் ஏற்­பட்­டுள்­ளதை தொடர்ந்து இலங்கை அர­சாங்கம் சமூக ஊட­கங்­களை தடை­ செய்­துள்­ளது.

காடையர் கும்­பல்கள் பள்ளிவாசல்களை தேடி தேடி தாக்­கி­யுள்­ளன. முஸ்­லிம்­களுக்கு சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்­க­ளையும் வீடு­க­ளையும் அவர்கள் தாக்­கி­யுள்­ளனர்.

ஏப்­ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களின் எதிர்­வி­ளை­வா­கவே இந்த தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. திலாரா (பெயர் அவ­ரது பாது­காப்­புக்­காக மாற்­றப்­பட்­டுள்­ளது) தனது கண­வரின் வர்த்­தக நிலை­யத்தை 500 பேர் கொண்ட கும்­ப­லொன்று தாக்­கி­யது என தெரிவித்தார்.

அவர்கள் எங்கள் வர்த்­தக நிலை­யங்கள் மீது கற்­களை வீசி எறிந்­தனர். காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த பொருட்­களை கொள்­ளை­ய­டித்­துச்­சென்­றனர் என தெரிவித்த அவர் தனது கண­வரும் மூன்று ஊழி­யர்­களும் அச்சம் கார­ண­மாக உள்ளே பதுங்­கி­யி­ருந்­த­வேளை இது இடம்­பெற்­றது எனவும் தெரிவித்தார்.

அவர்கள் மூர்க்­கத்­தனத்துடன் வந்து கற்­களை வீசி எறி­யத்­தொ­டங்­கி­னார்கள். எனது கணவர் தலையில் கற்­கள் ­ப­டு­வதை தவிர்ப்­ப­தற்­காக கடும் போராட்­டத்தில் ஈடு­பட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் வர்த்­த­க­ நி­லை­யத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்­ததும் எனது கண­வ­ரையும் மூன்று ஊழி­யர்­க­ளையும் தாக்கத் தொடங்­கி­னார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் அவ­ரது கண­வரை வெளியே இழுத்­துச்­ சென்­ற­வர்கள் கடு­மை­யாக தாக்க முயற்­சித்­துள்­ளனர்.

எனினும் அதிர்ஷ்­ட­வ­ச­மாக  அவ்­வேளை அந்த இடத்துக்கு இரா­ணு­வத்­தினர் ஜீப்பில் வந்­தனர். அவர்கள் அந்த கும்­பலை துரத்­தி­விட்­டனர் என்­கின்றார் டிலாரா. வேடிக்கை பார்த்த படை­யினர்

இதே­வேளை இந்த சம்­பவம் இடம்­பெற்­ற­வேளை  அருகில் இரண்டு மூன்று டிரக்­கு­களில் இரா­ணு­வத்­தினர் நின்­று­கொண்­டி­ருந்­தனர். அவர்கள் வன்­மு­றையை தடுப்­ப­தற்­காக எந்த முயற்­சி­யையும் செய்­ய­வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வன்­மு­றை­ வெ­றி­யாட்டம் கார­ண­மாக எங்­க­ளுக்கு 20 மில்­லி­ய­னுக்கு மேல் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். கிராமம் கிரா­ம­மாக சென்று தாக்­கினர்

குரு­நா­கலில் வன்­மு­றையில் ஈடு­பட்­ட­வர்கள் கிராமம் கிரா­ம­மாக சென்று தாக்­கு­தலை மேற்­கொண்­டனர் என உள்ளூர் தக­வல்கள் தெரிவிக்­கின்­றன.

ஊர­டங்குச் சட்டம் நடை­மு­றை­யி­லி­ருந்த வேளை­யிலும் குரு­நா­கலில் அவர்கள் கிராமம் கிரா­ம­மாக செல்­கின்­றனர்.  அவர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு கண்ணீர் புகை­பி­ர­யோ­கத்தை கூட மேற்­கொள்­ள­வில்லை என தரிசா என்­பவர் தனது டுவிட்டர் செய்­தியில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதி­கா­ரிகள் அவர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக எந்த நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை எனவும் தக­வல்கள் வெளியா­கின்­றன.

மினு­வாங்­கொ­டையில் 500 பேருக்கு மேற்பட்ட முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான  டயமன்ட் பாஸ்டா நிறு­வ­னத்தின் உற்­பத்தி தொழிற்­சா­லையை  தாக்கி அதனை தீயிட்டு கொளுத்­தி­யுள்­ளனர். குறிப்­பிட்ட நிறு­வனம் எரிந்­து­கொண்­டி­ருப்­பதை காண்­பிக்கும் வீடி­யோக்கள் வெளியா­கி­யுள்­ளன.

வன்­மு­றையில் ஈடு­பட்ட ஆறு பேரை பொலிஸார் கைது ­செய்­தனர். எனினும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர அந்த இடத்­துக்கு வந்து கைது­ செய்­யப்­பட்­ட­வர்­களை விடு­தலை செய்­யு­மாறு பொலி­ஸா­ருக்கு அழுத்­தங்­களை கொடுத்தார்.

அவரின் இந்த செயல் வன்­மு­றையில் ஈடு­ப­டு­வ­தற்­கான துணிச்­சலை ஏனை­ய­வர்­க­ளுக்கு வழங்­கி­யது. பள்ளிவாசலொன்றில் தேடு­தலை நடத்­து­வ­தற்­காக  ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்­களை பௌத்­த­ ம­த­கு­ரு­மார் கள் அணி­தி­ரட்­டினர் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்­டுள்­ளது.

தனது வீடு தாக்­கப்­பட்ட சம்­ப­வத்தை டுவிட்­டரில் வர்­ணித்த ஒருவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

காடையர் கும்பல் கதவை உடைத்து திறந்­து­கொண்டு எனது வீட்டுக்குள் நுழைந்­தது. நாங்கள் எங்கள் பெற்­றோ­ருடன் வசிக்கும் இந்த புதிய வீட்டின் ஜன்னல் கண்­ணா­டி­களை அவர்கள் உடைத்து நொருக்­கி­னார்கள். கடந்த மாதம் சிறு­நீ­ரக சத்­தி­ர ­சி­கிச்சை செய்­து­கொண்ட எனது தந்தை நடக்­க­மு­டி­யா­தவர். இதனால் நாங்கள் தப்­பி­யோட முய­ல­வில்லை என அவர் டுவிட்­டரில் தெரிவித்­துள்ளார்.

இதே­வேளை வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் மீது பதில் தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள முய­ல­ வேண்டாம் என முஸ்­லிம்கள் தங்கள் சமூ­கத்­த­வர்­களை கேட்­டுக்­கொள்ளும் செய்­தி­களை டுவிட்­டரில் பதிவு செய்­துள்­ள­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

நாங்கள் கடந்த காலத்­திலும் அமை­தி­யா­­யி­ருந்தோம், தற்­போதும் அமை­தி­யா­க­வுள்ளோம், எதிர்­கா­லத்­திலும் அமை­தி­யா­க­யி­ருப்போம் என  சம்மாஸ் கூஸ் என்­பவர் டுவிட்­டரில் தனது கருத்தை பதிவு செய்­துள்ளார்.

இது கோழைத்­த­ன­மல்ல இது அதி­க­பட்­ட துணிச்சல் என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

எத்­தனை பள்ளிவாசல்கள் அழிக்­கப்­பட்­டன என நான் கவ­லைப்­ப­ட­வில்லை. அவற்றை மீளக் கட்­டி­யெ­ழுப்­பலாம். நான் மக்கள் குறித்து கவ­லை­ய­டை­கின்றேன் என பர்ஹான் நிஜாம்தீன் என்­பவர் டுவிட்­டரில் பதிவு செய்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ போன்ற சிலர் 1983 இனக்­க­ல­வ­ரத் தின் போது தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பட்ட நிலை  குறித்து எச்­ச­ரித்­துள்­ளனர்.

1983 ஆம் ஆண்டு நிலமை மீண்டும் உரு­வா­கா­ததை உறு­தி­ செய்­ய­ வேண்­டி­யது அனை­வ­ரி­னதும் கடமை என அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து டீஆர்டி வேர்ல்டிற்கு கருத்து தெரிவித்த தனது பெயரை குறிப்பிட விரும்பாத பொறியியல் மாணவர் ஒருவர் பழிவாங்கும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டார்.

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது காடையர்கள் தாக்குதலை மேற்கொள் வது இது முதல் தடவையல்ல.  அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்காதவரை இது தொடரும் என அவர் தெரிவித்தார்.

வழமை போன்று இம்முறையும் அரசாங்கம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அனுமதிக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். இது துயரமா னது என அவர் தெரிவித்தார்.