வடகொரியா கடுமையான வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவில் கடந்த 37 ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான வரட்சி  இதுவே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

10 மில்லியன் உணவு வடகொரிய மக்களுக்கு தேவைப்படுகின்றது என ஐ.நா தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வடகொரியா மக்கள் இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 300 கிராம் உணவை உட்கொள்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வரட்சி காரணமாக  உணவு இல்லாமல் 1990 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 

 கடுமையான வரட்சி காரணமாக வடகொரியாவில் விளைச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டதால் உற்பத்தி குறைந்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு தேவையான 1.5 மில்லியன் தொன் உணவுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.