வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. 

பிவிதுரு ஹெல உறுமவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இதனை சபநாயகரிடம் கையளித்தனர்.  

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, எஸ்.பி.திஸாநாயக்க, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன , நாமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, வியாழேந்திரன் மற்றும் டிலான் பெரேரா உள்ளிட்ட 64 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.