கண்டி மெனிக்கின்ன பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற ஐவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரிய உத்தரவிட்டார்.

மேற்படி சம்பவத்தில் மெனிக்கின்ன, தம்பராவ, கிரிமெட்டிய, பிலவல முதலிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐவர் கடந்த செவ்வாய்க்கிழமை(14) மெனிக்கின்ன நகரத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த ஐவரையும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்த போதே நீதவான் அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்