(நா.தினுஷா)

தேசிய பாது­காப்­புக்கு சவால் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் இன­வா­தத்தை தூண்டும் வகை­யி­லான செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­கவும் முடி­யாது. இன்­னு­மொரு கல­வ­ரத்தை நாட்டில் ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்கப் போவ­தில்லை. ஒரு­வ­ருக்கு ஒருவர் குற்றஞ் சுமத்­து­வதை தவிர்த்து விரைவில் நாட்டின் நிலை­மை­களை சீர்­செய்­வ­தற்­காக ஆளும் மற்றும் எதிர்த்­த­ரப்­பினர் ஒற்­று­மை­யாக செயற்­ப­டு­வது அவ­சியம் என்று போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். 

நாட்டில் வன்­மு­றை­களை தூண்டும் வகை­யி­லான அச்­சு­றுத்தல் செயற்­பா­டு­க­ளுக்கு பின்­ன­ணியில் உள்ள அனை­வ­ருக்கும் எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  

மினு­வாங்­கொடை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற குழப்ப நிலையை அடுத்து அந்த பிர­தேச மக்­களை சந்­திப்­ப­தற்­காக சென்ற அமைச்சர் அதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் மேலும் கூறி­ய­தா­வது, உயிர்த்த ஞாயி­று தினத்தன்று இடம்­பெற்ற தொடர் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­களை தொடர்ந்து நாட்டில் இடம்­பெறும் அசம்­பா­வித செயற்­பா­டு­க­ளினால் நாட்டின் அமைதி யின்மை, சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­களின் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருப்­பினும் அதன் தொடர் தாக்­கங்­களை தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.  

இந்­நி­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை பாது­காப்பு அச்­சு­றுத்தல் நிலைமை காணப்­பட்­ட­துடன் பாட­சா­லை­களின் பாது­காப்­பிலும் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆயினும் அவற்றை சமா­ளிக்க தேவை­யான தீர்­வையும் வழங்­கினோம். தாக்­கு­தல்­க­ளுக்­கான அச்­சு­றுத்தல் காணப்பட்டாலும் வேெறாரு குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் இது போன்ற தாக்­கு­தல்­களை அர­சியல் மயப்­ப­டுத்­தவும் ஒரு சிலர் முயற்­சிக்­கின்­றனர். 

இது­போன்ற சூழ்­நி­லையை எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது. இன­வா­தத்தை தூண்டும் வகை­யி­லான செயற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்ளக் கூடி­யவை அல்ல. 30 வரு­ட­கால யுத்தம் 1983 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளினால்  நாட்டு மக்கள் அனை­வரும்  பாரிய இழப்­புக்­களை சந்­தித்­தனர். ஆகவே மீண்டும் நாட்டில் இன்­னு­மொரு கல­வர நிலையை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்­கவும் முடி­யாது.  

இந்த சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் உள்ள அனை­வ­ருக்கும் கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். அதே­போன்று நாட்டு மக்கள் அனை­வரும் ஒரே இனத்­த­வர்­க­ளாக ஒற்­று­மை­யாக செயற்­பட்டு மிக விரைவில் நாட்டை அபி­வி­ருத்­திப்­பா­தையில் இட்­டுச்­செல்­வது அவசியமாகும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவதும் அவசியம். ஆனால்  தற்போது அதற்கு எதிர்மாறான சம்பவங்களே நாட்டில் இடம் பெற்று வருகின் றன. இருப்பினும் இந்நிலைமையை  விரைவாக மாற்றிய மைக்க அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.