(எம்.எப்.எம்.பஸீர்)
சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபா பணம் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது.
அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றினர். அது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தபப்ட்டுள்ளன.
அதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அந்த பணம் சிரியாவில் பயிற்சிபெறும் பயங்கரவாதிகளால் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சிரியாவில் பயிற்சி பெறுவதாக கூறப்படும் மொஹம்மட் முஹ்சீன் இஷாக் அஹமட் மற்றும் சர்பாஸ் நிலாம் ஆகியோரின் பெற்றோரும் சகோதரியுமே குறித்த தெஹிவளை வீட்டில் வசித்துள்ளனர். அதன்படி பெற்றோரான மொஹம்மட் சஹீட் மொஹம்மட் முஹ்சின், சஹாப்தீன் இனாயா மற்றும் அவர்களது மகளான பாத்திமா ருவையா ஆகிய மூவரிடமும் சி.ரி. ஐ.டி.ல் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM