(செ.தேன்மொழி)

வடக்கு கடற்பகுதியில் 78 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படையினர் மாமுனை, செம்பியன்பத்துக்கு அண்டிய கடற்பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் பொலிஸ் போதைப் பொருள் பிரிவினருக்கு ஒப்படைத்துள்ளனர்.