இதய அடைப்பை அகற்ற வந்துவிட்டது புதிய ட்ரான்ஸ்கீட்டர்.!

Published By: Robert

26 Apr, 2016 | 12:48 PM
image

“புத்தகம் படிக்கும் போது மனமானது அமைதியாக இருக்கும். ஆனால் இதயமோ புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்குமோ என்றும், அடுத்து என்ன நடக் குமோ? என்றும் பதைபதைக்கும் இப்படி செய்தாவது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து இதயத்தைக் காத்திடலாம். அல்லது தேநீரில் உள்ள ப்ளேவோனாய்ட்டுகள் இரத்தக் குழாய்களை மேம்படுத்தி அதனை ஓய்வெடுக்க வைக்கும். இதன் மூலமாகவும் இதயத்தைக் காத்திடலாம்.

எனவே தினமும் இரண்டு கோப்பை தேநீரைப் பருகலாம். ஒரு சிலருக்கு தேநீர் பருக பிடிக்காது என்றால் டார்க் சொக்லேட்டை சாப்பிடுங்கள். ஏனெனில் டார்க் சொக்லேட்டில் கொக்கோ உள்ளது. அந்த கொக்கோவிலும் ப்ளேவோனாய்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இதனால் இரத்தம் உறைதல் தடுக்கப்படுகிறது. இந்த வழிகளை பின்பற்ற கடினமாக இருக்கிறதா? தியானத்தை பழகுங்கள். அதுவும் பிடிக்கவில்லையா உங்கள் திறன் மற்றும் எரிச்சலை ஒன்று சேர்த்து ஒரு பஞ்ச்சிங் பேக்கில் காட்டுங்கள் இதனாலும் உங்கள் இதயம் திடமாகப் பாதுக்காக்கப்படும். இவை எவற்றையும் செய்ய இயலாது என்றால் ஒரே வழி தினமும் ஏதேனும் உடற்பயிற்சியையோ அல்லது நீச்சலையோ தொடருங்கள் உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் காக்கப்படும்’ என்று இதயத்தின் ஆரோக்கியத்திற்கு ஏராளமான வழிமுறைகளை சொல்லிக் கொண்டே செல்கிறார் டொக் டர் சி. கோகுலகிருஷ்ணா. இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதய சிகிச்சை நிபுணராக சென்னையில் பணியாற்றி வரு கிறார். அவரிடம் மேலும் இதயம் தொடர்பான பல வினாக்களை முன் வைத்தோம்.

இதயத்தில் வலி ­ஏற்பட்டவர்களுக்கு உடனே என்ன செய்யவேண்டும்?

அவரை உடனடியாக உட்கார வைத்து, கழுத்து, மார்பு இடுப்பிலுள்ள துணிகளை தளர்த்திவிடவேண்டும். நிதானமாகவும் ஆழ்ந்து மூச்சை சுவாசிக்கும் படி சொல்ல வேண்டும். அவருக்கு பயம் இருக்கும். அதனால் தைரியம் சொல்லிக் கொண்டே அவரது பையைப் பார்க்கவேண்டும். அதில் ஏதேனும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் இருந்தால் அதனை எடுத்து நாக்கின் அடியில் வைத்துவிடவேண்டும். அதன் பிறகு அருகிலுள்ள மருத்துவமனையின் அம்பியூலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து அதில் அவரை ஏற்றிவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

இதயப்பாதிப்பு யாருக்கு வரும்?

யாருக்கும் வரலாம் அல்லது யாருக் கெல்லாம் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், புகைப் பிடித்தல், மன அழுத்தம், உடல் உழைப்பின்மை, சத்தான காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவை இருக்கிறதோ அவர் களுக்கு இதயத்தில் பாதிப்பு எந்த வடிவில் வேண்டுமானாலும் வரலாம். பாரம்பரியம் காரணமாகவும் இதயப்பாதிப்பு வரக்கூடும். இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதே பாதிப்புக்கு மருத்துவரீதியான காரணம்.

இதனால் இதயத்திற்கு செல்லும் குழாய்களில் கொழுப்பு படியாமல் பாதுகாத்து பராமரிப்பதே ஒவ் வொருவருடைய பணி. இதில் ஏதேனும் சிறிய அளவில் தடையோ சுணக்கமோ ஏற்பட்டால் கூட இதயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் அலட்சியப்படுத்தக்கூடாது.

பொதுவாக முப்பது வயதிற்கு மேற்பட்ட இரு பாலாருக்கும் நெஞ்செரிச்சல் இருக்கும். இதனை அல்சர் என்று எண்ணி அதனை கவனி யாது விட்டுவிடுவர் அல்லது எப்போதாவது ஒரு முறை அதற்கு மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்வர்.

ஆனால் இது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதனால் ஏதேனும் அறிகுறிகள் வித்தியாசமாக தென்பட்டால் உடனே மருத்துவர்களை சந்தித்து விளக்கமோ சிகிச்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இதனிடையே சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் உடனே தென்படாது என்பதையும் தெரிந்து கொள் ளுங்கள்.

இதற்காக ஏதேனும் நவீன சிகிச்சை முறைகள் வந்திருக்கிறதா?

ஏராளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டேயிருக் கிறது. தற்போது இதயத்தில் உள்ள ஆரோடிக் எனப்படும் பெருந்தமனி குழாய்கள் சிலருக்கு பாதிக்கப்பட்டு விடுகிறது. இதனால் ஏற்படும் இதயப் பாதிப்பை தற்போது ட்ரான்ஸ்கீட்டர் பெருந்தமனி வால்வு மாற்று சத்திர சிகிச்சை என்ற சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கு முன்னால் இத்தகைய பாதிப்பிற்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி என்ற பெயரில் நான்கு மணித்தியாலத்திற்கும் மேல் சத்திர சிகிச்சை நடைபெற்றது.

ஆனால் இந்த புதிய சத்திர சிகிச்சை மூலம் ஒன்றரை மணித்தியாலத்தில் சத்திர சிகிச்சை முடிந்துவிடும். இரத்த இழப்பு இல்லை. நோயாளிகளும் விரைவில் வீடு திரும்பலாம். இதன் வெற்றி வீதம் 99 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அதே போல் தற்போது இதயப் பாதிப்பு என்று வருபவர்களுக்கு த்ராம்போலை சேஷன், பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ரி, நவீன வசதிகளுடன் கூடிய பேஸ் மேக்கர், 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய எக்கோ கார்டியோகிராம். அதன் பிறகு எம் ஆர் ஸ்கேனர் வித் ஹார்ட் மஸ்ஸல் வயபிலிட்டி ட்ரீட்மெண்ட், ஸ்டெண்ட் பொருத்துதல், இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் என ஏராளமான நவீன மற்றும் புதிய சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எம்மைப் பொறுத்த வரை வருமுன் காப்போம் தான் சிறந்த வழி. அதனால் இதயத் திற்கு ஏதேனும் பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டு, அதன் பிறகு அதனை பாதுகாத்து பராமரிப்பதை விட, நீங்களாகவே உங்கள் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

இந்த ஸ்டெண்ட் பொருத்துவது, பேஸ் மேக்கர் பொருத்துவது இதனால் நோயாளியின் வாழ்க்கை நடைமுறை மாற்றியமைக்கப்படுகிறது என்கிறார்களே இது உண்மையா?

உங்களின் ஆரோக்கியத்தையும் உயிரை யும் காப்பாற்ற மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை தான் இந்த வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள். உங்களின் விருப்பப்படி வாழ்க்கை வாழ்ந்ததால் தானே இதயம் பாதிக்கப்பட்டது. அதனால் மருத்துவர்கள் சொல்லும் பரிந்து ரையை கட்டாயம் பின்பற்றவேண்டும். அதிலும் தற்போது கரையக்கூடிய ஸ்டெண்ட் வந்துவிட்டதால் கவலையடைய தேவை யில்லை.

அதைப் போல் பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்திவிட்டு கூட சில இடங்களுக்கு பயணிக்க இயலும். அதே போல் இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் மூலம் எந்த பகுதிப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் பாதிப்பிற்கேற்ற வகையில் மாற்று வழியைப் பயன்படுத்தி நோயாளியை காக்க இயலுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45
news-image

கை விரல் நுனியில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-01-01 21:40:07
news-image

யூர்டிகேரியா எனும் தோல் அரிப்பு பாதிப்பிற்கு...

2024-12-31 17:09:55
news-image

ஆட்டிசம் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-12-30 16:33:25
news-image

தாடை வலி பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2024-12-27 16:53:23