(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேசிய பாகாப்பில் ஏற்பட்ட இடைவெளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்த பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன, பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் அதற்கான மகஜரை சபாநாயகருக்கு கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மதக்கல்வியை ஒழுங்குறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அனைத்து இன மாணவர்களும் பிற மதக்கல்வியை கற்கும் மதக்கல்வி முறைமை ஒன்றை ஏற்படுத்தவேண்டும். மதக்கல்விக்கான பாடத்திட்டங்களை அமைப்பதற்கு சர்வமத ஆலோசனை குழு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும். அனைத்து மதக்கல்வியும் இந்த ஆலோனைக் குழுவினால் கண்காணிக்கப்படவேண்டும். இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமே மத அடிப்படைவாதங்கள் தலைதூக்காமல் பாதுகாக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.