(எம்.மனோசித்ரா)

வன்முறைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் சட்டத்தின் கீழும், அவசர கால சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்மாதம் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் பொலிஸார் மற்றும் முப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, வன்முறைகளுடன் தொடர்புடைய குழு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.