அம்பாறையில் ஐந்து பேரை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுப்பட்ட தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறையை சேர்ந்த ஐவரிடமிருந்து சுமார் 32 இலட்சம் பெறுமதியான பணத்தை மோடி செய்ததாக தெரிவித்த புகாரை அடுத்து குறித்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொலன்னாவையைச் சேர்ந்த குறித்த தம்பதியினர் அம்பாறை பகுதியில் வேலை வாய்ப்புக்கள் வழங்கும் அலுவலகத்தை நடத்திவந்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.