மஹ­சொஹொன் பல­காய எனும் அமைப்பின் தலைவர் வித்­தா­ரண பத்­தி­ர­ண­லாகே அமித் ஜீவன் வீர­சிங்­கவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மஹசொஹொன் பலகாய எனும் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க , கண்டி திகன வன்முறைகளின் பிரதான சூத்திரதாரியாக கருதப்பட்டு கைது  செய்யப்ட்டவராவார். அது தொடர்பில் 7 மாதங்கள் விளக்கமறியலில் இருந்த அவர் கடந்த 2018 ஒக்டோபர்  31 ஆம் திகதியே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வட மேல் மாகா­ணத்தில்  குரு­ணாகல் மாவட்டம், குளி­யாப்­பிட்டி மற்றும் நிக்­க­வ­ரட்டிய பகு­தி­களில் முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்ட குழு­வொன்று முன்­னெ­டுத்த  தொடர் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான பிர­தான விசா­ர­ணை­க­ளுக்­கவே இவர் நேற்றைய தினம் தெல்தெனிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.