(செ.தேன்மொழி)

இலங்கை கடற்படையின் சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் ஷெங்கி துறைமுகத்தை அடைந்துள்ளது.

சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள சமுத்திர பாதுகாப்பு கண்காட்சியில் பங்குப்பற்றுவதற்காகவே சமுத்ரா கப்பல் அங்கு சென்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த சமுத்ரா ஷெங்கி துறைமுகத்தை அடைந்ததுடன் , சிங்கப்பூர் கடற்படையினரால் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்கப்பட்டது. 

இந் நிகழ்வில் சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் இணைந்துக் கொண்டிருந்தனர். 33 நாடுகளின் கடற்படையினர் இந்த கண்காட்சி நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளனர். 

நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சி செயற்பாடுகளில் கலந்துக் கொண்டு எதிர்வரும் 17 ஆம் திகதி சமுத்ரா நாடு திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.