ஐந்து வயதான சிறுமி ஒருவர் தூக்கத்தில் 100 அடி உயரத்திலிருந்து விழுந்த சம்பவம் தாய்லாந்து ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 

பாடசாலையின் நிகழ்வொன்றிற்காக தாய்லாந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, குறித்த சிறுமி தூக்கத்தில் இரவு நேரத்தில் நடந்து சென்றபோது அறையின் கதவுகள் மூடியிருந்தமையால் செல்ல வழியில்லாமல் தவறுதலாக வீழ்ந்த காட்சிகள் சி.சி.டி கெமாராவில் பதிவாகியுள்ளது. 

குறித்த ஹோட்டலுக்கு அம்புலன்ஸை வரவழைத்து சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.