எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெசாக் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் திங்கட்கிழமை பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீர்மானத்துக்கு அமைவாகவே இவ்வாறு பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.