
இணையத்தள இணைப்பை வயர் இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘Wi-Fi’ என்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை கணினி, கையடக்கத் தொலைப்பேசி, மடிக் கணினி போன்ற சாதனங்களில் இணையத்தள வசதிகளை பெற முடியும்.
தற்போது ‘Wi-Fi’ வை விட 100 மடங்கு வேகம் கொண்ட தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு ‘Li-Fi’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘Wi-Fi’ இல் 1 ஜி.பி தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அதை விட 100 இல் 1 மடங்குதான் ‘Li-Fi’ நேரம் எடுத்துக் கொள்கிறது.
தகவல் தொழில் நுட்பத்தில் ‘Li-Fi’ புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.