(நா.தினுஷா)
தேசிய பாதுகாப்புக்கு சவால் ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இனவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கவும் முடியாது.
இன்னுமொரு கலவரத்தை நாட்டில் ஏற்படுத்த இடமளிக்க போவதில்லை. ஒருவருக்கு ஒருவர் குற்றஞ் சுமத்துவதை தவிர்த்து விரைவில் நாட்டின் நிலைமைகளை சீர்செய்வதற்காக ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியம் என்று போக்குவாரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
மேலும் நாட்டில் வன்முறைகளை தூண்டும் வகையிலான அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு பின்னணியில் உள்ள அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுருத்தினார்;.
மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்று குழப்ப நிலையை அடுத்து அந்த பிரதேச மக்களை சந்திப்பதற்காக மேற்பார்வை விஜயத்தை மேற்கொண்டபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பட்ட அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க , மேலும் கூறியதாவது;
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் இடம்பெறும் அசம்பாவித செயற்பாடுகளினால் நாட்டின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பினும் அதன் தொடர் தாக்கங்களை தவிர்த்துக்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை காணப்பட்டதுடன் பாடசாலைகளின் பாதுகாப்பிலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.ஆயினும் அவற்றை சமாலிக்க தேவையான தீர்வையும் வழங்கினோம்;.தாக்குதல்களுக்கான அச்சுறுத்தல் காணப்டாலும் வேரொரு குழுவினரால் முன்னெடுக்கப்படும் இது போன்ற தாக்குதல்களை அரசியல் மயப்படுத்தவும் ஒரு சிலர் முயற்சிக்கின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையை எமது எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்படுத்திவிடக்கூடாது.இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள கூடியவை அல்ல.
30 வருடகால யுத்தம் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளினால் நாட்டு மக்கள் அனைவரும் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளனர். ஆகவே மீண்டும் நாட்டில் இன்னுமொரு கலவர நிலையை ஏற்படுத்த இடமளிக்கவும் முடியாது.
இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனத்தவர்களாக ஒற்றுமையாக செயற்பட்டு மிக விரைவில் நாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வது அவசியமாகும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளும் தரப்பு எதிர்தர்ப்பு உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவதும் அவசியம்.ஆனால் தற்போது அதற்கு எதிர்மாறான சம்பவங்களே நாட்டில் இடம்பெற்று வருகிறது. இருப்பினும் இந்நிலைமை விரைவாக மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM