பொகவந்தலாவ பகுதியில் நேற்று சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகலவத்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என விசாரணைகளில் இருந்த தெரியவந்துள்ளதுடன். பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.