மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி தாக்கத்தின் பின்னர் கரையோர பிரதேசங்களில் ஒதுக்கீட்டு பிரதேசமான 50 மீற்றர் எல்லைக்குள் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக மாவட்ட கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் கே.கோகுலதீபன் தெரிவித்தார்.

ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலகப்பரிவுகளிலேயே இச்சட்டவிரோத கட்டடிங்கள் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழுள்ள மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின்கீழ் செயற்படும் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய சட்டம் தொடர்பான விளக்கமூட்டல் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு பிரிட்ஜ் வீவ் இன் விடுதியில் நடைபெற்றது.

- ஜவ்பர்கான்