சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் புதிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம்  அறிவித்துள்ளது.

நாங்கள் பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் இறுக்கமான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். பேஸ்புக் விதிகளை மீறியவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியை உடனடியாக தடைசெய்யப்பட்டு 30 நாட்கள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் தற்போது புதிய ஒரு வேலைநிறுத்த (one strike )அணுகுமுறையை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தும் அனைத்து விதிகளையும் குறிப்பிடவில்லை. ஆனால் இது தொடர்பான மேலதிக விதிமுறைகளை விரைவில் அறிவிக்கவுள்ளது.

சமீபத்தில் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த தாக்குதில் ஈடுபட்டவர், தாக்குதல் சம்பவத்தை தனது பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார். பள்ளிவாசல்களுக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது வரை நேரடி ஒளிபரப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வெளியிட்ட பேஸ்புக் நேரடி ஒளிபரப்பை அந்த நேரத்தில் 200 பேர் மட்டுமே பார்த்தனர், மேலும் வீடியோ பதிவேற்றப்பட்ட 29 நிமிடங்களில், 4 ஆயிரத்திற்கு மேற்பட்டுடோர் அதிக மக்கள் பார்த்தனர். உடனடியாக பேஸ்புக் பயனாளர் ஒருவர் அந்த வீடியோ குறித்து புகார் செய்தவுடன் வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடு இருந்தபோதிலும் பல தளங்களில் அந்த வீடியோ பரவியதாகவும், அதனை தடுக்க பேஸ்புக் தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையிலேயே பேஸ்புக் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.