ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை 

Published By: R. Kalaichelvan

15 May, 2019 | 12:37 PM
image

அமெரிக்காவுக்கு எதிராக செயல் பட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரித்துள்ளார். 

மேலும் ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகம் அருகே 2 வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகின. எத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தோ, யார் தாக்குதல் நடத்தியது என்பது குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இருப்பினும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.மேலும் ஈரானிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என கடந்த ஆண்டு அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது. 

இந்நிலையில் அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

 இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்பிடம் ஈரானில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் வகையில் அந்நாட்டுடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. 

ஈரான் தொடர்பாக சில விஷயங்களை கேள்விப்படுவதாக குறிப்பிட்ட ட்ரம்ப் அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது செய்யுமானால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். 

‘வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒரு போதும் இருக்காது எனவும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52