நியூஸிலாந்து பிரதமருக்கு இலஞ்சம் அனுப்பிய 8 வயது சிறுமி!

Published By: Vishnu

15 May, 2019 | 11:59 AM
image

'டிரெகன்' தொடர்பில் ஆராய்ச்சி நடத்துமாறு ‍கோரி 8 வயது சிறுமியொருவர் நியூஸிலாந்துப் பிரதமருக்கு 5 நியூஸிலாந்து டொலர்களை இலஞ்சமாக அனுப்பி வைத்துள்ளார். 

நியூஸிலாந்து நாட்டுப் பிரதமர் ஜெசிந்தாவுக்கு அந் நாட்டைச் சேர்ந்த விக்டோரிய எனும் மேற்படி சிறுமி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர்,  தான் ‘டிரெகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிரெகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது மாத்திரமன்றி அந்தக் கடிதத்துடன் 5 நியூஸிலாந்து டொலர்ளையும் இணைத்து அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்திற்கு மதிப்பளித்த நியூஸிலாந்துப் பிரதமர், அவரது கைப்பட பதில் கடிதம் ஒன்றை எழுதி அந்த சிறுமிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் பிரதமர், டிரெகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை.

நீங்கள் அளித்த இலஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ளமுடியாது. அதனால் அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிரெகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்து உங்களது தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08