கிழக்கு சீனாவில் WeChat சமூகவலைதளம் மூலம் தனது நாய்களின் பெயர்களை வெளியிட்டதால் நபர் ஒருவர் சர்சையில் சிக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

 கிழக்கு அன்ஹூயி மாகாணத்தில் உள்ள 30 வயதான பன் என்ற நபர் வளர்க்கும் நாய்களுக்கு சென்குவுன் மற்றும் ஸீய்குவான்  என்ற பெயர் வைத்து  WeChat சமூகவலைதளம் மூலம் தனது நாய்களின் பெயர்களை வெளியிட்டதால் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த நாய்களுக்கு குறித்த நபர் அரசாங்கம் மற்றும் பொதுபணித்துறையில் பணியாற்றியவர்களின் பெயர்களை வைத்தமைக்கு எதிராக பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

"நான் சட்டத்தை அறிந்திருக்கவில்லை, இது சட்டவிரோதமானது என்று எனக்குத் தெரியவில்லை" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறித்த நபர் 10 நாட்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.