சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதத்தில் வந்த  குறித்த பெண் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டபோது சில இலத்திரனியல் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த சம்பம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.