அவுஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பப்புவா நியூகினியா மற்றும் சொலமன் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கோகோபோ ((Kokopo island)) தீவின் அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.5 ரிச்டர் அளவு கோலில்  10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கண்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.