உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுகிழமை இலங்கைக்கு வருகை தந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, வட மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நலன்புரி முகாம்களிற்கும் செல்லவுள்ளதுடன், சிவில் அமைப்புகளை சந்திக்கவுள்ளதுடன், மறவன்புலவு வீட்டுத் திட்டத்தையும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கண்காணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.