வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் விடயங்களை முன்னெடுத்ததான குற்றசாட்டில் மாத்தறையில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 35-45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொட பிரதேசத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதான குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 13 சந்தேக நபர்கள் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். 

மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.