டென்ஷனை குறைக்கும் ஹிப்னோ தியானம்.

Published By: Daya

14 May, 2019 | 05:07 PM
image

ஹிப்னோ தியானத்தின் மூலம் உடலின் இறுக்கம் நீக்கி, தேவையான அளவு தளர்வை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை நீக்கி, அமைதியை உருவாக்க வல்லது. இதனை ஹிப்னோ தியானம் என்று கூறலாம் அல்லது உடல் தளர்வு பயிற்சி என்றும் குறிப்பிடலாம். இதனை காலையில் உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக அல்லது உணவு எடுத்து இரண்டு மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்.

பாடசாலை செல்லும் குழந்தைகள் முதல், அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, ஓய்வு நேரத்தை இல்லத்தில் கழிக்கும் முதியவர்கள் வரை அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை டென்ஷன். ‘ஒரே டென்ஷனாக இருக்கிறது.’,  ‘டிப்ரஷனாக இருக்கிறது.’ ‘ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறது.’... இதுபோன்ற வாக்கியங்களை நாள்தோறும் எம்முடைய குடும்ப உறுப்பினர்களின் புலம்பல்களில் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு என்ன காரணம்?,  உடனே எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள், உணவு பழக்கங்கள் என்று கூற தொடங்குவார்கள். ஆனால் இதை தவிர்த்து, மனதையும், உடலையும் கையாளத் தெரியாத நிலைதான் இதற்கு காரணம் என்று தெரிய வரும்போது, நாம் உண்மையில் ஆச்சரியப்படுகிறோம்.

எம்முடைய உடலில் மட்டுமல்ல மனதிலும் பலவிதமான டொக்ஸின்கள் (நச்சுகள் ) எம்மையுமறியாமல் அடியாழம் வரை சென்று படிந்துவிடுகின்றன. இதனை எப்படி அகற்றுவது என்று தெரியாமல் விழிக்கிறோம். இந்தத் தருணத்தில் இதனை எளிதாக அகற்றும் ஒரு உபாயம் இருக்கிறது என்றால், உடனே அதனை தெரிந்து கொண்டு, பின்பற்ற தொடங்குவோம் அல்லவா அதுதான் ஹிப்னோ எனப்படும் ஹிப்னோ தியானம்.

தியானம் என்றவுடன், ஆஹா..! இது ஆன்மீக பயிற்சி. தியானப் பயிற்சி, குரு வேண்டும். முறையாக குரு தீட்சை பெற வேண்டும். அப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம் .இந்த தியானத்தை= இந்த எளிய தியானத்தை, தினமும் இரண்டு முறை நீங்கள் மேற்கொண்டால், உங்களுடைய மனம் தளர்ந்து உடல் பிரச்சனைகளை கூடதீர்வு கிடைக்கும்.

இந்த ஹிப்னோ தியானத்தின் மூலம் உடலின் இறுக்கம் நீக்கி, தேவையான அளவு தளர்வை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை நீக்கி, அமைதியை உருவாக்க வல்லது. இதனை ஹிப்னோ தியானம் என்று கூறலாம் அல்லது உடல் தளர்வு பயிற்சி என்றும் குறிப்பிடலாம். இதனை காலையில் உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக அல்லது உணவு எடுத்து இரண்டு மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்.

முதலில் அமைதியான ஒரு இடத்தை தெரிவு செய்து, பின் அங்கு கண்களை மூடி அமருங்கள். சில நிமிடங்கள் உங்களுடைய மனதில் பலவிதமான எண்ணங்கள் அது அலுவலகம் தொடர்பாகவோ அல்லது நாளாந்த பணிகள் தொடர்பாகவோ, குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாகவோ.. ஏதோ ஒன்று எண்ணங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த தருணத்தில் மெல்ல மெல்ல உங்களுடைய உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை வரை உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும், மனதில் நினைத்து, அவை ஒவ்வொன்றும் ஓய்வு பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் போது, அந்தந்த உறுப்புகளில் இறுக்கம் நீங்கி, உடல் முழுவதும் தளர்வடையும். இதனை அமர்ந்து கொண்டும் செய்யலாம். படுத்து கொண்டும் செய்யலாம் அல்லது யாராவது சொல்ல சொல்ல இதனை செய்யலாம்.

இதன்போது எம்முடைய மூளையிலுள்ள மின்காந்த அலைகளின் வேகம் குறைந்து, மனம் அமைதியும், ஆனந்தமும் கொள்கிறது. அந்த தருணத்தில் செரோட்டோன் எனப்படும் ஹோர்மோன் சுரப்பி பணியாற்றி, மகிழ்ச்சி தூண்டப்படுகிறது. இதனை தினமும் இரண்டு முறை செய்தால், உங்களின் மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக அமையும். நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29