சப்ரகமுவ மாகாண ஆசிரியர் சேவைக்கு மேலும் 130 பட்டதாரிகள் இம்மாதம் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று மாகாண கல்விச் செயலாளர் எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. புவியியல், வரலாறு, பௌத்த சமயம் ஆகிய பாடங்களுக்கு இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்மை குறிப்பிடத்தக்கது.