மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்பது பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

மினுவங்கொடையில் நேற்று இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது , அவர்களை 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.