ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள டுவிட்டர் காணொளியில் தெரிவித்துள்ளதாவது, 

‘கடினமான கட்டத்திலும் எங்கள் அணியினர் விடாமுயற்சியுடன் போராடினார்கள். எங்கள் அணி வீரர்கள் தவறு செய்தார்கள். ஆனால் அந்த சரிவில் இருந்து மீண்டு வந்தார்கள். அது தான் முக்கியமானது. அனைத்து வீரர்களும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தனர். 

எங்கள் அணியினர் யாரும் ஆரஞ்சு நிற தொப்பியோ, ஊதா நிற தொப்பியோ பெறவில்லை. அதில் யார் கவனம் செலுத்தினார்களோ? அவர்கள் அதனை பெற்று இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.