இலங்கையில் காணப்படும் பாதுகாப்பு நிலவரம் குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ளதாக முன்னாள்  இராணுவதளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு கூடிய விரைவில் தீர்வை காணலாம் என எவராவது கருதுவார்கள் என்றால் அவர்கள் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களே என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் திட்டமிட்டு செயற்பட்டால் பாரிய பயங்கரவாத அமைப்பை அழிப்பதற்கு இரண்டு வருடங்கள் தேவைப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வெளிநாட்டு படைகளோ உதவியோ தேவையில்லை இலங்கையிடம் போதியளவு ஆயுதங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டகங்களால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் இராணுவம் தோல்வியடையும் எனவும் சரத்பொன்சேகா  தெரிவித்துள்ளார்.