12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸை, மும்பை இந்தியன்ஸ் ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி நான்காவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 149 ஓட்டங்களை குவித்தது. 150 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு ஆரம்ப வீரராக களமிறங்கிய வோட்சன் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடினார்.

அதன்படி அவர் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஒட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்களாக 80 ஓட்டங்களை குவித்து ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் இப் போட்டியில் வோட்சன் காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் இரத்தம் சொட்ட சொட்ட விளையாடியதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இப் போட்டியில் சென்னை அணியை வெற்றிபெறச் செய்ய வோட்சன் அந்த வலியுடன் கடுமையாக போராடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.