இந்தியா, தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் திகதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்துள்ளார்.

அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கமலின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அவரது வீட்டின் முன் சில இந்து அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தலாம் என்று வந்த தகவலை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.